சென்னை சிட்டி செண்டரில் வண்டி ஓட்டும் ஆசையில்..

ஊரில் வீட்டு மொட்டை மாடியில் புறாவுக்கான கூடுகள் உள்ளன. புறாக்களை பார்ப்பது நல்ல இன்பமான பொழுது போக்கு.. எனக்கும் மகனுக்கும்.. அப்படியான ஒரு வேளையில்..

.jpg)
திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில்.. காத்திருக்கும் காலை நேர குளிரில்

இரவு படுக்கும் முன் படுக்கையில் தலையணை, பெட்சீட் போடுவது எல்லாம் எடுத்து தருவது தினசரி தலைவரின் முக்கியமான வேலைகளில் ஒன்று.. வேற யாரும் தரக் கூடாது... அப்படியான ஒரு தருணத்தில்

செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு படம் எடுப்பது பிடித்தமான பொழுதுபோக்கு.. போட்டோ கோக்குமாக்கா விழுந்தாலும் அதை எடுக்க அவர் செய்யும் அலும்பு.. அம்மாடியோவ் தாங்க முடியாது.. ஏகப்பட்ட போஸ் கொடுத்து தான் போட்டோ எடுப்பாராம்.

அத்தை மகள் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் வாங்கி வந்த கோப்பையை வைத்துக் கொண்டு பில்டப் போஸ்.. ஹா ஹா ஹா நல்லா தானே இருக்கு.. ;-))
