Friday, July 24, 2009

பணம் இனிது! பொருள் இனிது! அதை விட இனிது மழலை.

என் பதிவில் எழுதியது.மகனுக்கு வயசு 3 ஆக இன்னும் சில மாதங்கள் இருக்கு.. சேட்டையும் பேச்சும் அதிகமா இருக்காம்... :) இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பலை. இப்ப அவங்க அம்மாவோட நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு பிரிகேஜி மாதிரி அனுப்பலாமா? இல்ல மொத்தமா வரும் 2010 ஜூனில் எல்கேஜியில் சேர்க்கலான்னு யோசனையில் இருக்கோம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்க வீட்டுக்கு பக்கத்தில் மசூதி இருக்கு.. காலையும், மாலையும் அங்கே அரபிப் பாடம்(மதரஸா) நடக்கும். தினமும் சும்மாவாச்சியும் போய்ட்டு வருகிறான். சில நேரங்களில் போக அடம் பிடிக்கின்றான்.. அப்படித் தான் ஒரு மதரஸாவுக்கு போகாத நாளில் மதரஸாவில் பாடம் சொல்லித் தருபவர் (ஹஜரத்) தெருவில் இவனைப் பார்த்து “ஏன், காலையில் மதரஸாவுக்கு வரல.. நாளைக்கு வரல அடி பிச்சிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார்.. இவன் முழிச்சு இருக்கான். “நாளைக்கு ஒழுங்கா வரனும் என்ன?” என்று அவர் சொல்ல இவன் “ எங்க மாமாகிட்ட சொல்லி, உங்க தோலை உரிச்சு, ஜன்னலில் கட்டி தொங்கப் போட்ருவேன்” என்று சொல்லி இருக்கான்... :( ஹஜரத் வீட்டில் வந்து (ஜாலியாக) கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கார். மற்றவர்கள் சொல்வதை புரிந்து அதே பாணியில் பதில் சொல்லும் பழக்கம் அதிகமாகி விட்டது.. கொஞ்சம் பெரிதானால் புரியும் என்று நினைக்கிறேன்.

*******************************************************************

ஒருநாள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து மழைத் தண்ணீர் விழும் பைப்பில் இருந்து தண்ணீர் கொட்டி இருக்கு.... மேலே போய் பார்த்தால், மேல்நிலைத் தொட்டியின் மூடியைத் திறந்து அதனுள் ஒரு PVC ஹோசைப் போட்டு, தண்ணீரை உறிஞ்சி மொட்டை மாடிக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தானாம்... இதே போல் ஒருநாள் வீட்டில் நின்ற பைக்கில் பெட்ரோல் டேங்கைத் திறந்து அதிலும் ஹோசை நுழைக்க முயலும் போது கையும் களவுமாக பிடிபட்டு இருக்கிறான்.

**********************************************************************

பாட்டி(அவனது அம்மம்மா) தண்ணீர் அள்ளிக் (எங்க ஊரில் மெத்தி) கொடுக்கச் சொன்னால் நீங்களே போய் தண்ணி அள்ளிக்கங்க என்று சொல்கிறானாம்.
“ஒரு உதவி கூட செய்ய மாட்டியா” என்று கேட்டால் “என்னை செரப் படுத்தாதீங்க” என்று சொல்கின்றானாம். (செரப்படுத்ததல் என்றால் தங்கமணி ஊரில் கஷ்டப்படுத்துதல்) இதே போல் சாப்பாடு ஊட்டும் போது அவரை கஷ்டப்படுத்தக் கூடாதாம்.

இவையெல்லாம் அவ்வப்போது வரும் புகார்களின் தொகுப்பு.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அங்கு ஆடு வளர்க்கிறார்கள்.. மதிய வேளைகளில் ஆடுகள் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வரும். வழக்கமாக வரும் வளவு(எங்க ஊரில்கொல்லைப் புறம்)க்கான பாதை மூடி இருக்கும் என்பதால் வீட்டுக்கு வெளியே நின்று கத்தும்.. உடனே இவன் வெளியே போய் “கத்தக் கூடாது .. அப்பா இப்ப வந்துடுவாங்க.. வந்து உங்களுக்கு கஞ்சி வைப்பாங்க” என்று ஆடுகளுடன் பேசிக் கொண்டு இருப்பானாம். (அப்பா என்பது தாத்தா)

**************************************************************

சமீபத்தில் தங்கமணிக்கும் மகனுக்கும் நடந்த உரையாடல்

மகன் : அம்மா, வயிறு ஏன் பெரிசா இருக்கு?

தங்கமணி : வயித்துக்குள்ள நம்ம குட்டி பாப்பா இருக்கு.

மகன் : குட்டிப்பாப்பா எப்பமா வெளியே வரும்?

தங்கமணி : இப்பதானே வளருது.. சீக்கிரமா வந்து உன்னோட விளையாடும்

மகன்: நான் வேணா வயித்துக்குள்ள போய் பாப்பா எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரவா?


**********************************************************************

Friday, May 22, 2009

2009 January - February எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

2009 January - February Updates

சென்னை சிட்டி செண்டரில் வண்டி ஓட்டும் ஆசையில்..ஊரில் வீட்டு மொட்டை மாடியில் புறாவுக்கான கூடுகள் உள்ளன. புறாக்களை பார்ப்பது நல்ல இன்பமான பொழுது போக்கு.. எனக்கும் மகனுக்கும்.. அப்படியான ஒரு வேளையில்..

திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில்.. காத்திருக்கும் காலை நேர குளிரில்
இரவு படுக்கும் முன் படுக்கையில் தலையணை, பெட்சீட் போடுவது எல்லாம் எடுத்து தருவது தினசரி தலைவரின் முக்கியமான வேலைகளில் ஒன்று.. வேற யாரும் தரக் கூடாது... அப்படியான ஒரு தருணத்தில்செல்போனை எடுத்து வைத்துக் கொண்டு படம் எடுப்பது பிடித்தமான பொழுதுபோக்கு.. போட்டோ கோக்குமாக்கா விழுந்தாலும் அதை எடுக்க அவர் செய்யும் அலும்பு.. அம்மாடியோவ் தாங்க முடியாது.. ஏகப்பட்ட போஸ் கொடுத்து தான் போட்டோ எடுப்பாராம்.அத்தை மகள் பள்ளியில் நடந்த ஒரு போட்டியில் வாங்கி வந்த கோப்பையை வைத்துக் கொண்டு பில்டப் போஸ்.. ஹா ஹா ஹா நல்லா தானே இருக்கு.. ;-))

Wednesday, March 25, 2009

Ring a ring a roses - டான்ஸ் பார்ட்டி

இடம் : நெல்லை மாவட்டம் செய்துங்க நல்லூர்
நாள் : 05 ஜனவரி 2009
வீடியோ தெரியாதவர்களுக்காக
http://www.youtube.com/watch?v=SUVKnKrLRW4

Wednesday, March 18, 2009

கோவை - வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து...

இடம் : கோவை வ.உ.சி பூங்கா
நாள் : January 25 2009
தம்பியுடன் (சித்தப்பா மகன்)கூண்டுக்குப் பின்னால் பயத்துடன் !?

அம்மாவும், சித்தியும் பின்னால் இருக்க தனியாக ஏறி குரங்கு பார்க்கின்றனர்.


கிளி கூண்டின் முன்


அன்னப் பறவையின் தரிசனம்


கம்பியின் மீது ஏறிக் கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்

Thursday, November 13, 2008

குட்டிப் பையனா இருக்கேனேன்னு பார்க்காதீங்க.. நாங்களும் வருங்கால ப்ளாக்கர் தான்... :)பிறந்து மூணு நாள் தானுங்க ஆகுது.. அதுக்குள்ள போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொன்ன என்ன நியாயம் இதெல்லாம்...கொடுக்குவோம்ல போஸூ... இப்ப மூணு மாசமாயிடுச்சு பாஸூ...என்னை பனியன் போட விடுங்கய்யா... நானும் பெரிய மனுசன் தானுங்க...ये आराम का मामला है! யே ஆராம் கா மாமலா ஹை!

கொடைக்கானலில் குளிரில்எல்லாம் ஒழுங்கா இருக்கனும்.. இல்லைன்னா பிச்சிப்புடுவோம்.. பிச்சு.. நாங்களெல்லாம் கரிசல் காட்டு ரவுடிக...என்னத்த சொல்ல... சாக்லேட் கேட்டா வாங்கித் தரமாட்டாங்களாம்... என்னய்யா இது கொடுமயா இருக்கு


நாமலும் பெரிதானதும் அத்தா மாதிரி பதிவெல்லாம் எழுதனுமோ?


யாருய்யா அது? கண்ணை சிமிட்டும் போது போட்டோ எடுத்தது???

ஒரு வயதிலே என்ன ஆனந்தம்... :)ஒரு வயசில பல் விளக்கச் சொல்றாங்கப்பா... ஆடு, மாடு, ஆயில்யன் மாமா, பாரதி மாமா, மதுமதி அத்தை, சந்தனமுல்லை அத்தை, ஸ்ரீமதி அத்தை எல்லாம் பல்லா விளக்கறாங்க.. நம்மளைப் போய் பல் துலக்க சொல்லிக்கிட்டு...பல் துலக்கியாச்சு... அதுக்காக வாயைத் திறந்து எல்லாம் காட்ட முடியாது.. போய் வேளையைப் பாருங்கய்யா..ஒரு ஹீரோ லுக் இருக்குல்லா.... ;)அதான் சொல்றோம்ல... நாங்களும் ரவுடிதான்... வாங்க ஒண்டிக்கு ஒண்டி பாத்துடலாமா?....ரொம்ப புகழாதீங்க.. எனக்கு வெக்க வெக்கமா வருது...சரி... சரி... பாத்துட்டு ஓடிப் போய்டுங்க எல்லாம்...அமெரிக்க அரசியலில் என்னோட நிலைப்பாட்டைச் சொல்ல வருவதற்கு முன்னால் நான் என்ன சொல்ல வர்ரேன்னா...